அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை கடைவீதியில் உள்ள பென்சிஸ்டோர் மளிகை கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் மளிகை கடையில் இருந்து சுமார் 35 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. தற்போது இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.