நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மஞ்சள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த பயங்கர தீ விபத்தினால் ரூபாய் 8 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் மஞ்சள் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.