ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி மருந்து கோவிஷீல்டு. இந்த மருந்தை கொரோனா தடுப்பூசியாக நாடு முழுவதும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்தது. மேலும் அண்டை நாடுகளான நேபாளம் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இந்த மருந்தை மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மருந்து தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்துவரும் நிலைநிலையில் சீரம் நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் கொரோனா தடுப்பு மருந்துக்கு எந்த சேதமும் இல்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை