மத்திய அரசின் 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்று வேளாண்மை சட்டங்களையும் நிறுத்தி வைத்தும், விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த குழுவில் பூபிந்தர் சிங்மான், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நிறுத்துவதற்கு முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 4 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது. ஏனென்றால் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 4 பேருமே விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள். அவர்கள் இந்த சட்டங்களை ஆதரித்து பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள். கருத்துகளை கூறி இருக்கிறார்கள்.
அவர்களை வைத்து குழு அமைத்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த விஷயத்தில் மத்திய அரசின் சூழ்ச்சி இடம்பெற்றதாக கருதுகிறோம் என விவசாயி சங்கங்கள் தெரிவித்திருக்கிறது. இதனால் விவசாயிகள் போராட்டம் உச்சநீதிமன்றம் தலையிட்டும் முடிவுக்கு வராத சூழலை எட்டியிருக்கிறது.