விவசயிகள் போராட்டத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று விவசாய அமைப்பு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று விவசாய சட்டங்களையும் உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புது தில்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து 25 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் எதிர்கட்சிகளால் திட்டமிடப்பட்டு அரசியல் லாபத்திர்காக நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அகில இந்திய கிஸான் சங்கர்ஷ் ஒருங்கினைப்புக் குழு (All India Kisan Sangharsh Coordination Committee -AIKSCC) என்ற அமைப்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு எந்த அரசியல் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
மூன்று வேளான் சட்டங்கள் தொடர்பாக எதிர் கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியிருந்த நிலையில் விவசாயிகளிடமிருந்து இந்த எதிர்வினை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மை என்னவென்றால் இந்த மூன்று வேளான் சட்டங்கள் குறித்து அரசியல் கட்சிகள் தங்களின் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள இந்த போராட்டங்கள் வழிவகுத்துள்ள நிலையில், பிரதமர் இந்த போராட்டங்கள் எதிர்கட்சிகளால் நடத்தப்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளது தவறானது என அந்த விவசாய அமைப்பு தனது கடிதத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது. போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள விவசாய சங்கள்கள் அல்லது அமைப்புகளால் முன்வைக்கப்படுகின்ற எந்தவொரு கோரிக்கையும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தது இல்லை, என்றும் தெரிவித்துள்ளது.