விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் குறைந்த பட்ச ஆதார விலையை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய வேளான் சட்டங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர், மத்திய பிரதேச விவசாயிகளுடன் காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் தனது உரையில் விவசாயிகள் நலனுக்காக தாங்கள் கொண்டுவந்துள்ள சீர்திர்த்தங்களை பார்த்து எதிர்கட்சிகள் கலக்கமடைந்துள்ளதாக கூறினார். விவசாயிகளை போராட தூண்டி வாக்கு வங்கி அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளை மக்கள் இனம் கண்டுள்ளனர்.
வேளாண் சட்டங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்புவதை எதிர் கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். விவசாயிகள் நலனுக்காக எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரைகளை அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்கட்சிகளுக்கு வேளாண் சட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லை அவர்களுக்கு மோடியுடன் தான் பிரச்சனை என்றும் கூறினார்.