கரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அடுத்த 6 மாதங்களுக்கு மாஸ்க் கட்டாயம் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இதுகுறித்து அம்மாநில மக்களிடம் ஆற்றிய உரையில், ‘கரோனாவைக் கட்டுப்படுத்த மீண்டும் பொதுமுடக்கம், அல்லது இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தவேண்டும் என நிபுணர்கள் சொல்கிறார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை. வரும்முன் காக்கும் நோக்கத்தோடு அடுத்த 6 மாதங்களுக்கு மக்கள் கட்டாயம் பேஸ் பாஸ்க் அணியவேண்டும். கரோனா ஆபத்தை உணராமல், மற்றவர்களுக்கும் பரப்பும் ஆபத்தை செய்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் புதுவகை வீரியத்துடன் கரோனா தொற்று பரவிவருகிறது. அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இயல்புநிலை நம் மாநிலத்தில் திரும்பிவந்தாலும் பள்ளிக்கூடங்களைத் திறப்பது என்பது பிரச்னையாகவே உள்ளது.’என்றார்.