மேக்கப் போடாமல் உங்கள் முகம் அழகாக தெரிய வேண்டுமா இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி பயனை பெறுங்கள்.
பாலை காய்ச்சும்போது அதிலிருந்து வரும் ஆவியில் உங்களின் முகத்தை காட்டி , அந்த வியர்வையை துடைக்காமல் காயவிடுஙகள். அரைமணி நேரம் கழித்து நீங்கள் முகம் கழுவினால் முகம் ஜொலிக்கும்.

இதேபோல் தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கவும். அதனை அரைத்த பேஸ்ட்டை முகத்தில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவுங்கள். முகம் பளபளப்பு அடைந்து பளிச் என இருக்கும்.
ஒரு வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவுங்கள் முக பளபளப்பு கூடும். பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூசிவர முகம் சிவந்து பளபளப்பாகும்.

உருளைக்கிழங்கு சாறு மற்றும் கடலைமாவு இரண்டையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால் முகம் பொலிவு பெறும். செம்பருத்திஇலை கூட பயத்தம் பயரை சேர்த்து சமஅளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவர முகம் பளபளக்கும்.
நம் அருகில் கிடைக்கும் அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதிலும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகர தோற்றம் பெரும். இதையெல்லாம் செய்து உங்கள் அழகைக் கூட்டுங்கள்.