பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இணையதளம் வழியாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு குறித்து அதிமுக அரசு ஜனவரி 31-க்குள் அறிவிக்க வேண்டும். ஜனவரி 31-க்குள் உள் ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்த முடியாத நிலை ஏற்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்டி கூட்டணி தொடர்பாக முடிவெடுப்போம்” என்றார்.
இட ஒதுக்கீடு குறித்து அறிவிக்காமல் இருந்தால் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து பா.ம.க வெளியேறும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னோட்டமாக வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தின் 38 மாவட்ட தலைநகரங்களிலும், வன்னியர்களுக்கு இட பங்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள்திரள் போராட்டத்தை நடத்துவதாக பா.ம.க அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.