கரோனா நோய் தொற்றானது பல அரசியல் விஜபிக்களின் வாழ்க்கையையும் முடித்து வருகிறது. அந்தவகையில் இப்போது இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சாந்தகுமாரின் மனைவி சந்தோஷ் சைலஜா கரோனாவால் உயிர் இழந்துள்ளார். அவருக்கு வயது 75.
கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இவர் காங்ரா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தீவிர சிகிட்சைக்கு அவர் உடல் ஒத்துழைக்காத நிலையில் உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்குர், பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட பல பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாந்தகுமார் இருமுறை இமாச்சல பிரதேச எம்.பியாகவும், வாஜ்பாய் ஆட்சியில் மத்திய உணவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.