ஈஸ்வரன் திரைப்படம் இந்தியாவுக்கு வெளியில் இணையதளங்களில் ரிலீஸ் செய்யப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கும் திரைப்படம் தான் ஈஸ்வரன். கிராமத்து பின்னணியில் பேமிலி பேக்ரவுண்ட்டில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக நடிகர் சிம்பு எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார் இதனைத் தொடர்ந்து படத்தின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கான புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே ஈஸ்வரன் படம் வெளி நாட்டில் பிரபலமாக இருக்கும் OLYFILX என்கிற ஒடிடி மூலம் இந்தியாவுக்கு வெளியே ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு திரையரங்கு உரிமையாளர் கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓடிடியில் ரிலீஸ் செய்தால் ஈஸ்வரன் படத்தை திரையரங்கில் வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் படத்தி ற்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந் து படக்குழு திரையரங்க உரிமையா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது இணையதளங்களில் ரிலீஸ் செய்யும் முடிவை கைவி டப்பட்டுள்ளனர்