பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் சண்முகபுரம் என்கிற இடத்தில் பறவைகள் மற்றும் மீன்கள் வளர்ப்பு கடை ஒன்று உள்ளது. அங்கு யானை தந்தங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் வனஅதிகாரிகள் அந்த கடையை ஆய்வு செய்தனர். அப்போது யானையின் இரண்டு தந்தங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.அவற்றை பறிமுதல் செய்ததுடன் கடை உரிமையாளர் மணிகண்டன் என்பவரையும் பிடித்து விசாரணை நடத்தினர் .அப்போது வேட்டை தடுப்பு காவலர் சுவாமிநாதன் மற்றும் துப்புரவு பணியாளர் காத்தவராயன் ஆகியோர் இவற்றை மலையில் இருந்து எடுத்து வந்து அங்கலக்குறிச்சியை சேர்ந்த சிக்கந்தர் பாஷா மற்றும் சாரதி மூலம் அவற்றை விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது.
இதனையடுத்து 5 பேரை கைது செய்த வனத்துறையினர் இன்னொரு நபரை அங்கலக்குறிச்சி என்கிற இடத்தில் கைது செய்துள்ளனர் .கைது செய்யப்பட்ட 6 பேரும் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.