கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள ராகி, நெல், தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ஐயூர் வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் இந்த பயிர்களை நாசம் செய்து உள்ளது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 20க்கும் மேற்பட்ட யானைகள் கரும்பு தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தீப்பந்தத்துடன் யானைகளை விரட்ட முயற்சி செய்துள்ளனர். அப்போது திடீரென்று ஆக்ரோஷமான யானைகள் விவசாயிகளை தூரத்தத் துவங்கியது. இதனால் பயந்துபோன விவசாயிகள் யானைகளிடம் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்துள்ளனர். அப்போது தடுமாறி விழுந்ததில் விவசாயிகள் 6 பேர் காயம் அடைந்து உள்ளனர்.