ஊழல் புகார் குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் ஊழல் புகார் குறித்து முதலமைச்சருடன் விவாதம் நடத்துவதற்கு மு.க.ஸ்டாலின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
அதில் ஒன்று ‘சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த ஊழல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும். மற்தொரு நிபந்தனையில் ‘அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் என்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ எனவும் கேட்டுள்ளார் ஸ்டாலின். இந்த இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்றினால் முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் எனவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்