பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் நம் நாட்டினுடைய பாதுகாப்பு சம்பந்தமான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பொதுத்துறை நிறுவனமான பெங்களூர் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (HAL) நிறுவனத்திடம் இருந்து 83 இலகுரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் 73 விமானங்கள் எல்.சி.ஏ தேஜஸ் எம்.கே-1 ரகமாகும். 10 விமானங்கள் எல்.சி.ஏ தேஜஸ் எம்.கே-1ஏ ரகத்தைச் சேர்ந்தது. இந்த பத்து விமானங்களும் வீரர்களின் பயிற்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக ரூ. 45696 கோடி ஒப்புதல் அளிகப்பட்டுள்ளது. இந்த 83 விமானங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இது நவீன 4+ தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் தொழில்நுட்பத்தை கொண்ட விமானங்களாகும். எதிரி நாடுகளிடமிருந்து நம் நாட்டை பாதுகாக மட்டுமே இவை பயன்படுத்தபட உள்ளன. இந்த போர் விமானங்களில் கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு அப்பால் சென்று தாக்கும் ஏவுகணைகள், நடுவானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு தொழில் நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. உள்நாட்டில் தயாரிக்கும் போர் விமானங்களை கொள்முதல் செய்வது நாட்டில் இதுவே முதல்முறை. இதனால் இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி திரும்புவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.