நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு கார்களை நிறுத்துவதற்கு ஷெட் தனியாக உள்ளது. அந்த ஷெட்யில் இருந்து திடீரென்று நாய் அகோரமாக ஊளையிடும் சத்தம் கேட்டது.

பகல் நேரத்தில் ஷெட்டில் இருந்து இப்படி ஒரு சத்தம் கேட்டதும் அந்தப் பகுதி மக்கள் பயந்தனர். அந்த ஷெட் பூட்டப்பட்டு இருந்த நிலையில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணனுக்கும் தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகத்தில் அனுமதியுடன் போலீசார் விரைந்து சென்று அந்த கார் ஷெட்டின் பூட்டை உடைத்தனர். அப்போது ஒரு நாய் உள்ளே இருந்தது.பிறகு அதை பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். ஒரு நாள் முழுக்க அந்த நாய் உள்ளிருந்து கத்தி உள்ளது.ஆனால் இன்று காலையில்தான் நாய் குறைக்கும் சத்தம் அருகில் இருப்பவர்களுக்கு கேட்டுள்ளது.இதையடுத்து போலீஸார் ஷெட்க்கு பூட்டு போட்டனர்.