பொதுவாக அரசியல் களத்திற்கு வருபவர்கள் பணம்,பதவி,புகழ் மீது ஆசைப்பட்டு வருவார்கள். ஆனால் இவை அனைத்தும் இருப்பவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்றால் அது சினிமா காரர்களாக தான் இருக்கமுடியும்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணி நடிப்பில் கொடிகட்டிப் பறக்கின்ற ஒரு நபர்தான் கமல்ஹாசன். தற்போது இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை நிறுவி மக்களுக்காக நீதி கேட்க துணிந்துள்ளார்.இந்த நிலையில் தமிழ்நாட்டில் இவரது கூட்டணி யாருடன் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். கமலின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் பிப்ரவரி 21ம் தேதி கூட்டணி அறிவிப்பை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.