ஒட்டுமொத்த திரைப்பிரியர்களும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த திரைப்படம் தான் மாஸ்டர். தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் எதிர்கால தலையெழுத்தை நிர்ணயிக்கும் விதமாக மாஸ்டர் படம் மிகப்பெரிய பொறுப்புடன் பொங்கலுக்கு களம் இறங்கியுள்ளது. மாஸ்டர் படம் எந்த அளவு மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்பதை பொறுத்து நான் அடுத்தடுத்து நடிகர்களின் படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனாவுக்குப் பின் திரையரங்க ரிலீஸிற்கு வந்த முதல் பெரிய பட்ஜெட் படம் இதுதான்.
தற்போது இணையதளங்களில் படம் வெளியாகும் எண்ணிக்கை அதிகரிப்பதால் ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்க்க விருப்பப்படுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக மாஸ்டர் படம் சில நஷ்டங்களை பொருட்படுத்தாமல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களை விட இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்ற மிக ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டரைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் கைகோர்க்கிறார்
அதற்கு காரணம் என்ன என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதில் அவர், விஜய் பிரம்மாண்டமான கதைகளில் நடிப்பதை விட பிரமாதமான கதைகளை தேடி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் கதையின் கரு பிடித்து இருந்தால் உடனடியாக சிறிய இயக்குவார் என்று கூட பார்க்காமல் அதை முழு ஸ்கிரிப்ட் செய்யுங்கள் என்று கொடுக்கும் உற்சாகம்தான் தரமான படம் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார். அதேபோல்தான் டாக்டர், கோலமாவு கோகிலா ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம் நடிகர் விஜய். பிரம்மாண்ட இயக்குனர்களை விட தரமான படங்களைக் கொடுக்கும் இயக்குனர்களை தான் விஜய்க்கு பிடிக்கின்றது. தற்போது இளம் இயக்குனர்கள் பலரும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுப்பதால் விஜயின் கவனம் தற்போது இளம் இயக்குனர்களின் மீது சென்று உள்ளது என்று தெரியவருகிறது.