பொதுத்தேர்வு எழுதும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சளி, இருமல், தலைவலி போன்ற உடல் உபாதைகள் இருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அட்வைஸ் செய்துள்ளது.
கடந்த வாரம் பள்ளிக்கூடம் திறக்கப்பட்ட நிலையில் சேலத்தில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது. இதன் காரணமாகவே பள்ளிக்கல்வித்துறை அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளின் உடல்நலனில் முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே பள்ளிக்கு விடவேண்டும் என்றும், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களின் அறிவுரைப்படி மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் சம்பவத்தை முன்வைத்து கொரோனா பரிசோதனைக்குச் சென்ற மாணவ, மாணவிகள் யாரையும் பள்ளிக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.