சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் தொடரும். தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்கள் கூட்டணியில் தி.மு.க பெரிய கட்சி என்பதால், அவர்கள்தான் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வார்கள்.
அதே சமயம் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து நாடகம் ஆடுகின்றன. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து தமிழக முதல்வர் பல இடங்களில் பேசிவருகிறார். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் துரோகம் செய்கிறார். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்தான வாக்ஸின் தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும். பா.ஜ.க நிர்ப்பந்தத்தால் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினி, இப்போது சில காரணங்களால் பின்வாங்கிவிட்டார்” என்றார்.