திமுக எம்.எல்.ஏ சேகர்பாபு கரோனா தொற்றுக்கு சிகிட்சை எடுத்துவரும் நிலையில், மேலும் ஒரு திமுக எம்.பிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.இதற்காக அரசியல் கட்சியினர் பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சேலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த சேலம் எம்.பி.பார்த்திபனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதுதொடர்பாக நடந்த மருத்துவ சோதனையில் பார்த்திபனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அவரோடு தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.