சென்னை துறைமுகம் தொகுதி திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினரான பி கே சேகர் பாபுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான சேகர் பாபு கட்சியின் தலைவர் மு க ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுபவர். கட்சி வட்டாரத்தில் சுறுசுறுப்பானவர் என்று பெயரெடுத்த சேகர் பாபு கரோனா காலத்திலும் கூட கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானவுடன் தன்னுடன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களையும் பரிசோதனை செய்துக் கொள்ள சொல்லியுள்ளார்.
அதிமுகவில் வட சென்னை பகுதியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த சேகர்பாபு, 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனைகளால் 2011 அவர் அதிமுகவிலிரிந்து விலகி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடதக்கது