தோனி தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்து இருக்கின்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு தற்போது 39 வயதாகிறது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தற்போது தீவிர விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தல தோனி.இவர் தற்போது ராஞ்சியில் சொந்த கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் காய்கறிகளை பயிரிட்டு வருகிறார். இங்குள்ள 10 ஏக்கரில் தக்காளி ,முட்டைகோஸ் ,பட்டாணி, பப்பாளி ,என பல வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிட்டு வருகிறார்.
இந்த பொருட்கள் அனைத்திற்கும் ராஞ்சியில் அதிகமாக டிமான்ட் இருக்கின்றது. இருப்பினும் இவைகளை துபாய்க்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளார் தோனி.இதற்கான பொறுப்பை ஜார்கண்ட் மாநில விவசாயத்துறை எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் துபாயில் இவற்றை வாங்குவதற்கு நிறுவனம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோனியின் வீட்டுக் காய்கறி என்ற பெயரில் வளைகுடா நாடுகள் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.