டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அருண் ஜெட்லி க்கு உருவச்சிலை வைக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிஷன்சிங் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.அவர் மறைவுக்குப் பின்னர் டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருண் ஜெட்லியின் பெயர் வைக்கப்பட்டது.தற்போது டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அருண் ஜெட்லிக்கு உருவச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் ரோஹன் ஜெட்லி பிஷன் சிங் பெடிக்கு அவர் அளித்திருக்கும் கடிதத்தில், ‘நான் மிகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதை நினைத்து ரொம்ப பெருமைபடுகிறேன். ஆனால் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பொழுது அதனை நான் மீறி விடுவானோ? என்று பயப்படுகிறேன். டெல்லி கிரிக்கெட் சங்கம் எனது பொறுமையை சோதித்துவருகிறது. அதனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு என்னை தள்ளுகிறது. டெல்லியில் உள்ள கேலரிக்கு வைக்கப்பட இருக்கும் எனது பெயரை உடனடியாக நீக்கி விடுங்கள்.நான் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்போது விலகிக்கொள்கிறேன். தீவிர ஆலோசனைக்குப் பிறகு தான் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
டெல்லி ஸ்டேடியத்திற்கு அருண் ஜெட்லி பெயர் அவசர அவசரமாக வைக்கப்பட்டுள்ளது. என்னை பொருத்தமட்டில் டெல்லி கிரிக்கெட் நிர்வாகத்தில் அருண் ஜெட்லி சிறப்பாக செயல்படவில்லை. கிரிக்கெட் வீரர்களை விட நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் கேலரிக்கு எனது பெயர் வைப்பதில் எனக்கு விரும்பவில்லை. எனது பெயர் உடனடியாக நீக்கி விடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.