சுமார் 1,000 எண்ணிக்கையில் தாழ்தள ஏசி சிஎன்ஜி பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான நிதிக்கு டெல்லி போக்குவரத்து கழக வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தேசிய தலைநகரில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட திட்டம் போடப்பட்டுள்ளது என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சிஎன்ஜி பேருந்துகள் என்பதால், காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது.
டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு ஒரு மாநில பிரச்சனையாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன