மிகவும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளில் குர்குமின் என்னும் மூலப் பொருள் இருக்கிறது. மஞ்சளில் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் ஆற்றலும் நச்சுத்தன்மையை அகற்றும் ஆற்றலும் உள்ளது. மேலும் இது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
அதிகப்படியான மஞ்சளை உட்கொள்வதால் செரிமானம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மஞ்சளில் உள்ள ஆக்சலேட்டுகள் கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட்டை உருவாக்குகிறது. இது கறையாத தன்மையை கொண்டிருப்பதால் இது சிறுநீரக கற்கள் உறுவாக காரணமாக அமைந்துவிடுகிறது என கூறப்படுகிறது.
மஞ்சள் நாளொன்றுக்கு எவ்வளவு தேவை என்பதற்கான பரிந்துரைகள் இல்லை. அதே சமயம் நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூள் ரசாயணம் கலக்காத தூய்மையான மஞ்சள் தூளாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் எந்த பொருளும் எதிர்வினைகளை உருவாக்கும், எனவே ஆரோக்கியமானது என்பதால் தினமும் அதிகப்படியான மஞ்சள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.