மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திண்டாடுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தடைகளைத் தாண்டி முன்னேற்றம் அடைய வேண்டிய நாள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். வெளி வட்டாரத்தில் யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உடன் வாக்குவாதம் வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெறும் நாள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பாராட்டு மழையில் நனைவீர்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கௌரவம் அதிகரிக்கும் நாள். உங்கள் செயலில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை பார்த்து சந்தோஷம் அடைவீர்கள். வியாபாரத்தில் பெரிய வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை தெரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை செய்ய வைப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ராசியில் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை அசிங்கப்படுத்துவது வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு இல்லாமல் லாபம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள். தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். கல்யாண பேச்சு வார்த்தை நடைபெறும். மனைவிவழியில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திடீர் யோகம் கிடைக்கும் நாள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை தெரிந்து கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து நடந்து கொள்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை கூப்பிட்டு பாராட்டுவார்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது. தாய்வழி உறவினர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முயற்சிகள் மூலம் முன்னேற்றம் காணும் நாள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றி மன மகிழ்ச்சி அடைவீர்கள். சிலர் உங்கள் உதவியை தேடி வருவார்கள். சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களை விற்க நேரிடும். புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய பணி அனைவராலும் பாராட்டப்படும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வேலைகள் முடியும் நாள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். புதியவரின் நட்பால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் நட்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து செய்து முடிப்பீர்கள்.