மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மாற்றங்கள் ஏற்படும் நாள். உங்கள் பிடிவாத குணத்தினால் பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் அனல் பறக்கும். உத்தியோகத்தில் முதலாளியின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவையான நாள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு உடன் இருப்பீர்கள். தன்னம்பிக்கை குறையும். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் உங்களை ஏமாற்றுவார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் மூலம் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நட்பினால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாள். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் மூலம் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல் ஒன்று ஒன்றும் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அனைவரும் பாராட்டுவார்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவித்து லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை பாராட்டுவார்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாள். தடைகளை கண்டு அஞ்ச மாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். புதுவேலை கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும் .உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் உங்களைத் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாள். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். விருந்தினர் வருகையால் மனம் மகிழ்ச்சி அடைவர். வெளிவட்டாரத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாக இருப்பீர்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி உண்டாகும் நாள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளியில் இருந்து நல்ல செய்தி வீடு தேடி வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்ய திட்டமிட்டவர்கள் உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்பு எல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்கிற எண்ணம் வந்து வந்து போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காண வேண்டிய நாள். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் நம்பி இருக்க வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் நடந்துகொள்ளுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்லது நடக்கும் நாள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்கும் படி நடந்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொது காரியங்களில் அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவதை பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைப்பார்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கடமை உணர்வுடன் செயல்படும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை நீக்கிவிட்டு புதிய பணியாளர்களை சேர்ப்பீர்கள் உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும்.