மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான காரியங்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் தலையை நுழைக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களைப் பற்றி குறை கூறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை நடக்கும் நாள். உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் ஏற்படும். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவு தருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலை பார்த்து பெருமை கொள்வார்கள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள். ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்களுடைய அந்தஸ்து உயரும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அடைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முயற்சியால் முன்னேற்றம் அடையும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சி செய்வீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். நட்பால் நல்லது நடக்கும். நீண்ட நாள் பிரார்த்தனை ஒன்று நிறைவேறும் .வியாபாரத்தில் பழைய வேலையாட்களை நீக்கிவிட்டு புதிய வேலையாட்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நன்மை கிடைக்கும் நாள். எதிர்பார்த்த சிலவிஷயங்கள் தள்ளிப்போகும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். பழைய கடன்களை தீர்ப்பீர்கள். புதிய வேலை வாய்ப்பு உங்களை தேடி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள் உத்தியோகத்தில் வேலையை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தைரியம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். புகழ் பெற்ற நிறுவனத்துடன் கை கோர்த்து உத்தியோகத்தில் உங்களுடைய கை ஓங்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டைகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை செய்ய வைப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைக்காததால் நஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பெயரை இழிவு படுத்தும் படி நடந்து கொள்வார்கள்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து காட்டுவீர்கள். பெருமை ஏற்படும். கை நிறைய பணம் வைத்திருந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைத் தாண்டி லாபம் பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை டென்ஷன் ஆக்குவார்கள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மதிப்பு அதிகரிக்கும் நாள். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் செயல்படுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பால் நம்பிக்கை அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று வழி நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளை செய்து நல்ல பெயரை பெறுவீர்கள்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாள்.உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் ஏற்படும். உறவினர்கள்,நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். வியாபாரத்தில் அதிக லாபத்தை பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக இருந்த கவலைகள் நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவுக்கு வரும் கோவில் சென்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன காரியங்கள் என்று நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்