மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து மனமகிழ்ச்சிஅடைவீர்கள் . தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவருக்கு மந்தமான நிலை ஏற்படும்
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும் தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பணிந்து நடப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் இனம்புரியாத சந்தோஷம் உண்டாகும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகபணியாளர்கள் உடைய ஆதரவு உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சண்டை போட நேரிடலாம் எதையும் பொறுமையாக இருப்பது நல்லது தொழில் மற்றும் வியாபாரத்தில் அவர்களுக்கு புது நட்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் செலவை குறைத்துக்கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நீண்ட பயணம் செல்லும் நாள் எதிர்பாராத பணவரவு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு உண்டாகும் சுய தொழிலில் லாபம் சீராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். ஒரு விஷயத்தில் முடிவு எடுப்பதில் அதிகமாக யோசிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். வெளியிடங்களில் அதிகமான கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நாள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். அசையும் அசையா சொத்துகளை வாங்குவதற்கு முயற்சி காட்டுவீர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்கும் நாள் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க அதிகமாக வாய்ப்பு உள்ளது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியதாக பாதை பிறக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களை கவரும் நாள் உங்களுடைய பேச்சுத் திறமை அனைவருக்கும் கவரும் விதமாக இருக்கும் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும் சுயதொழில் எதிர்பார்த்த அளவு லாபம் உண்டாகும்.