என்னதான் ரசாயனக் கலவைகள் சந்தைக்கு வந்தாலும் நம் பாரம்பர்யத்துக்கு இருக்கும் மவுசே தனிதான். அந்தவகையில் ஏற்கனவே மாட்டு சாணத்தில் இருந்து விபூதி, அகல்விளக்கு என பலப்பொருள்கள் செய்யப்பட்டுவருகிறது. அதன் அடுத்த பாய்ச்சலாக மாட்டுசாணத்தில் இருந்து விரைவில் வீடுகளுக்கு வண்ணம் பூசும் பெயிண்ட்ம் வர இருக்கிறது.
கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும்வகையில் இதை செயல்படுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதுதொடர்பில் ட்விட்டரில் அவர் கூறும்போது, ‘காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் மூலம் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட வேதிக் பெயிண்ட் விரைவில் வர உள்ளது. இந்த பெயிண்ட் வரவால் விவசாயிகளுக்கு கூடுதலாக 55000 ரூபாய் வருமானம் கிடைக்கும். பாக்டீரியா, பூஞ்சான் எதிர்ப்பு கொண்ட இந்த பெயிண்ட் சூழியலுக்கும் ஆபத்து இல்லாதது.’என தெரிவித்துள்ளார்.