புனேவில் இருந்து விமானத்தில் 5 இலட்சத்து 56 ஆயிரத்து136 தடுப்பூசிகள் சென்னைக்கு வந்து சேர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ஒருவருக்கு 30 நாள் இடைவெளியில் இரண்டு முறை தடுப்பு ஊசிகள் போடப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட கொரோனா ஒழிப்பு களத்தில் இருக்கும் முன் களப்பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் மக்கள் மிகுந்த அச்சத்துடனே பொழுதைக் கழித்துவந்தனர். இப்போது கண்டுபிடிகப்பட்டு இருக்கும் இரு தடுப்பூசிகளும் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டவை என்பதால் மக்கள் இதை செலுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.