கரோனா நேரம் என்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான துணை கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் நவ்தீப் சைனி ஆகியோர் உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது அவர்களை உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை மீறியதாக கிரிக்கெட் வாரியம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியில் அனைவருக்கும் தொற்று இருக்கலாம் என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விளையாடும் வீரர்கள் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு யாருக்கும் இல்லை என கண்டறியப் பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 7ஆம் தேதி சென்னையில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது எந்த ஒரு சிக்கலும் இருக்காது என்று தெரியவருகிறது.