வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் புதிய பிரைவசி பாலிசிகளை வெளியிட்டது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனுப்பும் தனிப்பட்ட தகவல்களை வாட்ஸ் அப் நிறுவனம் கண்காணிக்கவும், தேவைப்பட்டால் சேமிக்கவும் செய்யும் என கூறப்பட்டிருந்தது. இந்த விதிகளுக்கு உடன்படாமல் இருந்தால் வாடிக்கையாளர்களின் கணக்கு நீக்கப்படும் எனவும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனால் வட்ஸ் அப் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் இஸ்டாகிராம் உள்ளிட்ட வேறு ஆப்களுக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில் வாட்ஸ் அப் நிறுவனத்தில் பிரவசி பாலிசிக்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்த்தலாக விளங்கும் என்றும், இதனால் தனிநபர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிடுவதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.