சென்னை ஓமந்தூரார் மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் ‘முகக்கவசம் உயிர்கவசம்’ என்ற தலைப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. ஆனாலும் பரிசோதனை தொடர்கிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் நாளை முதல் தொடங்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் ஆறு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி போடப்படும். இரண்டு மணிநேரத்தில் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 1,554 பேர் கண்டறியப்பட்டுளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்