கொரோனா வைரஸின் அச்சுறுத்தல்கள் குறைந்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுவரும் இந்த நேரத்தில் வைரஸ்கான தடுப்பு மருந்தை பல நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு கண்டுபிடித்துள்ளது.
அதில் இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தனது மருந்து சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இதன்படி நேரடியாக மூக்கின் வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் சோதனையை விரைவில் தொடங்கவுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்துடனும் ,வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடனும் பாரத் பயோடெக் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த வகை மருந்துகள் வழக்கமான தடுப்பூசிகளை விட அதிக பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது