கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும்விதமாக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மத்திய அரசு அனுமதித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அந்த பணி இரண்டாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடுமுழுவதும் இரண்டு லட்சம்பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் செய்திக்குறிப்பில், “நேற்று ஒரே நாளில் நாட்டின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சுமார் 2 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக இப்பணி தொடரும். முன்பதிவு செய்து விருப்பமுள்ள தகுதியுடையோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்” என மத்திய அரசு அறிவித்துள்ளது.