கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கையாக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை முதல் தொடங்குகிறது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. அதன் பிறகு இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்படுள்ளது. தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3006 இடங்களில் தடுப்பூசி போடும் திட்டம் காணொலி வாயிலாக ஒருங்கிணைப்பு செய்யப்பட உள்ளது. ஒரு மையத்தில் நூறுபேர் வீதம் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது.