கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக உலகமே முடங்கிப்போனது. உலகப் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்தது கொரோனா. இப்போதுதான் உலக நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா மீண்டும் பரவி வருகிறது. இது மக்களை கவலை அடையச் செய்துள்ளது.
நம் இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸால் லட்சக்கணக்காணோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பலி எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருந்தாலும் இன்னும் வறுமையும், கொடுமையும் மக்களை விட்டு அகலவில்லை. உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.
கொரோனா சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா அதன் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு இம்மாதம் சீனாவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அடுத்து சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறுகையில், “சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவவில்லை. உலகின் பல இடங்களில் இருந்து கொரோனா வெடிப்பு நிகழ்ந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் உலக சுகாதார குழு செல்வது குறித்து சீனா கருத்து தெரிவிக்கவில்லை