தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ’’தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டததால் பல நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் என்ன என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறிவந்தாலும். பொறியியல் படிப்புகளை அதிகம் பேர் தேர்ந்தெடுத்து படித்ததை ஒரு காரணம் என பெரும்பான்மையானவர்கள் கூறிவருகின்றனர். இருப்பினும் தற்போது உள்ள காலகட்டத்தில் மக்களின் கவனம் பொறியியல் பாடங்களில் இருந்து வணிகப் படிப்பிற்கு கவனம் திரும்பியுள்ளது எனவும் வரப்போகிற எதிர்காலத்தில் வணிகப் படிப்பிற்கும் இப்படி ஒரு நிலைஏற்படலாம் எனவும் தற்போது கூறி வருகின்றனர்.
அதுபோக படித்து முடித்தவர்கள் அரசாங்க உத்தியோகத்திற்காக அரசு சார்பில் நடந்த போட்டி தேர்வுகளில் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் 66 பதவிகளுக்கு 1.36 லட்சம் பேர் போட்டியிடும் சூழல் தமிழகத்தில் உள்ளதாக கே எஸ் அழகிரி கூறியுள்ளார். தொழில் வளர்ச்சி, அந்நிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.