கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வேளையில் தடுப்பு ஊசியை செலுத்தி விட அனைத்து மாநில அரசுகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தற்போது முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளது. அந்த வரிசையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போடுவதற்காக பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு இருக்கிறது.இந்த பட்டியலில் உயிரிழந்த, ராஜினாமா செய்த நர்ஸ்களின் பெயர்களும் இடம்பெற்று இருப் பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.