தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கப்படும் எனவும்,
பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனவரி 4ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கலுக்கு பரிசுத் தொகுப்பு வழங்க வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்றும், இதில் எந்த தேதியில் யார் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டு இருக்கும் எனவும் முதல்வர் அறிவித்து உள்ளார்.