அருணாச்சல லிரதேச மாநிலத்தில் நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவிய சீனா அங்கு நூறுக்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய கிராமத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த கிராமத்தின் செயற்கை கோள் புகைப் படத்தை கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி ஒன்று வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படத்தை பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களும் இப்போது உறுதி செய்துள்ளனர். அங்கு சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த கிராம உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ., எம்.பி., தபிர் கவோ சீன ஆக்கிரமிப்பை உறுதி செய்துள்ளார். 2019 ஆகஸ்ட் மாதம் அந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப் படத்தில் புதிய ஆக்கிரமிப்பு காணப்படவில்லை. 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய கிராமம் உருவாகி இருப்பதாக நிபுணர்கள் உறுதி செய்தனர். சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு நம் நாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்