சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார், ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம், இன்ஸ்பெக்டர் மணிகண்ட பிரபு ஆகிய மூன்று பேருக்கு ஜனாதிபதியின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மெச்சத்தகுந்த பணியை பாராட்டி ஜனாதிபதியின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்புவு உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் 17-பேருக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்ப்பதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.