வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகின்றது.
டிசம்பர் மாதம் முடிந்த நிலையில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் குமரிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டல சுழற்சி காரணமாக மாலத்தீவு ,குமரி கடல் அருகே புதிய காற்றழுத்த நிலை ஒன்று உருவாகி உள்ளது. எனினும் இது மேலும் வலுப் பெற வாய்ப்பில்லை. தாழ்வுநிலை ஆகவே நடித்துக்கொண்டிருக்கும். இதன் காரணமாக நெல்லை ,தூத்துக்குடி, கன்னியாகுமரி ,தென்காசி, ராதாபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.திருச்சி, தஞ்சாவூர் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது .இன்றும், நாளையும் குமரிக்கடல், மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.