மத்திய அரசின் கடன் சுமை கடந்த 2020 செப்டம்பர் இறுதி நிலவரப்படி ரூ.107.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2020இல் முதல் காலாண்டில் மத்திய அரசின் கடன் 101.3 லட்சம் கோடியை எட்டியுள்ளது. குறவன் நெருக்கடி காரணமாக வருவாய் குறைந்து போனது அரசினுடைய செலவுகள் அதிகரித்தன .
இதன் காரணமாக முதல் காலாண்டை விட இரண்டாவது காலாண்டில் கடன் சுமை 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பர் இறுதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டியுள்ள கடன் பொறுப்புக்களில் பொதுக்கடன் பங்களிப்பு மட்டும் 91.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக பொதுக்கடன் தொடர்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ‘கொரோனா பெருந்தொற்று உலகெங்கிலும் உள்ள அரசாங்க நிதிநிலைகளை மோசமாக பாதித்துள்ளது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. பொருளாதார மீட்சி மீண்டும் கடன் நிலைத்தன்மையை மாற்றும். வேகமான மீட்டெடுப்பு அவசியம்’ என பொருளாதார வல்லுநர்கள் அடிக்கோடிட்டு காட்டுகின்றனர்.