சேலம் சின்னப்பம்பட்டியில் பேட்டி அளித்த கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறியதாவது, “ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியது சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தேன். ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.
முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது. சக வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் ஆதரவு அளித்தனர். அணியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர். பிறந்த எனது குழந்தையை பார்ப்பதை விட நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக நினைக்இருந்தது. வெற்றி கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுக்காக மேலும் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு” என்றார்