நெல்லை மாவட்டம் கோவிந்தபேரில் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனுக்கு கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துனைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே வாகனத்தில் நெல்லை நோக்கி பயணித்தனர்.
முதலமைச்சர் பாதுகாப்பு வாகனம் சரியாக வல்லநாடு பஜார் பகுதியை கடந்து 50 மீட்டர் சென்ற நிலையில் பாதுகாப்பு வாகனத்தை தொடர்ந்து வந்து கொண்டிருந்த அ.தி.மு.கவினரின் கார்களுக்கு குறுக்கே பசுக் கன்றுக்குட்டி ஒன்று குறுக்கிட்டுள்ளது. கன்று குட்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் பிடித்ததில் பின்னே வந்த கார், முன்னிருந்த கார் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்சியினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.