திருப்போரூர் அருகே ரவுடியை கொன்று எரித்த வழக்கில், ஏன் கொன்றோம் என அதிரவைக்கும் வாக்குமூலத்தை ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கொடுத்துள்ளனர்.
திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமம் பழண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் என்கிற சதீஷ்குமார். 39 வயதாகும் இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, சாராய விற்பனை, ஆள்கடத்தல், கொலை மிரட்டல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மேலையூர் மயானம் அருகே சதீசை படுகொலை செய்து அவர் உடலும் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சிறுதாவூர் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் பிரசாத் என்கிற பட்டாபிராமன் (வயது 23) பரத் என்கிற பத்மநாதன் (வயது 20), 18 வயதாகாத அவர்களின் கடைசி தம்பி ஆகியோர் கடந்த சிலமாதங்களாக இறந்துபோன ரவுடியிடம் அடியாட்களாக இருந்தது தெரியவந்துள்ளது.இதனையடுத்து அவர்களை பிடித்துவந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சகோதரர்கள் திருக்கழுக்குன்றம் அருகே ஆனூரை சேர்ந்தவர்கள். அங்கு நில பிரச்சனையால் அவர்களது தாயாரின் ஊரான சிறுதாவூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வந்துள்ளனர். அவர்கள் தங்களது நில பிரச்சனையை தீர்த்து வைக்கும் படி ரவுடி சதீஷ் இடம் கூறியுள்ளனர். அதற்கு சதீஷ் சகோதர்கள் மூவரும் தன்னுடன் வந்துவிடுமாறும், அதன் மூலம் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். அதன்பேரில் அவருடன் சேர்ந்து பல்வேறு குற்றங்களை செய்துவந்தனர். விரைவில் ஒரு கொலை செய்ய உள்ளதாகவும் அதற்கு பதிலாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும் சதீஷ் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நில பிரச்சனையில் சிலர் அவர்களது குடும்பத்தினரை கொலை முயற்சி செய்வதாகக் கூறிய சுரேஷ் சகோதர்களின் தாய், மமற்றும் பிரசாந்தின் மனைவி ஆகியோரை அழைத்து தனது வீட்டின் மாடியில் குடி வைத்துள்ளார். ஆனால் சகோதரர்கள் இருவரையும் வீட்டுக்குள் அனுமதிக்காமல் பல காரணங்களை கூறி அவர்களை தடுத்து வைத்துள்ளனர்.ஒரு கட்டத்தில் பிரசாந்தின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்யவே அந்த தகவல் சகோதர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து நம் குடும்பத்தையே ரவுடி சதீஷ், அழித்து விடுவான் என நினைத்து கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு அனைவரும் காரில் சென்று வீட்டுக்குள் புறப்பட்டுள்ளனர். அப்போது பின்னாலிருந்து இரண்டு பேர் சதீஷ் கழுத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள பிரசாந்த் கழுத்திலும் வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளார்.பின்னர் சடலத்தை எடுத்துச் சென்று மேலையூர் சுடுகாட்டில் வீசியுள்ளனர். பின்னர் காரை எடுத்துக்கொண்டு செல்ல முயற்சிக்கும் போது கார் அங்கிருந்து சிறு பள்ளத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் அப்படியே காரை போட்டுவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மனைவியும் தப்பாக நடந்துக் கொள்ள நினைத்ததால் கொன்று விட்டோம் என வாக்குமூலத்தில் போலீஸார் அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி இரண்டு பேரை புழல் சிறையிலும், கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுவனை காப்பகத்திலும் அடைத்துள்ளனர். பிரபல ரவுடி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் சிக்கியுள்ளது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை. ஏற்படுத்தி உள்ளது