பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் தலைவிரித்து தாண்டவமாடுகிறது. இதன் காரணமாக பிரிட்டனில் கடும் ஊரடங்கு மற்றும் பல்வேறு மருத்துவ நடவடிக்கைகளையும் எடுத்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் குடியரசு தின விழாவிற்கு நேரில் வந்து பங்கேற்க இருப்பதாக அறிவித்திருந்தார்.
ஆனால் தற்பொழுது பிரிட்டன் இருக்கும் நிலைமையில்
குடியரசு தினவிழாவில் பங்கேற்க முடியாமல் போனதற்கு பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார். இதை நமது இந்திய பிரதமர் அலுவலகம் உறுதி செய்தது.

இந்திய குடியரசுத் தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ கலந்து கொண்டு சிறப்பித்தார் அதேபோல் இந்த வருடம் பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனை பாதுகாப்பா பார்த்துக்கோங்க பிரதமரே!!!!!!!